போதைப் பொருள் விவகாரம் : முன்னணி நடிகர்களுக்கு சம்மன் அனுப்ப என்.சி.பி அதிகாரிகள் முடிவு
சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப் பொருள் விவகாரத்தை விசாரித்து வரும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முன்னணி நடிகர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் கரண் ஜோகர் நடத்திய இரவு விருந்தில் போதைப் பொருள் தாராளமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பார்ட்டி தொடர்பான வீடியோவில் நடிகை தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், அர்ஜூன் கபூர், வருண் தாவன், மலைக்கா அரோரோ, ஷாகித் கபூர்,விக்கி கவுசால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
நடிகை தீபிகாவிடம் விசாரணை நடத்தியுள்ள போதைத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடுத்து சில நடிகர்களுக்கு சம்மன் அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
Comments