ஹத்ராஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்குமாறு உமாபாரதி கோரிக்கை

0 1698
ஹத்ராஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்குமாறு உமாபாரதி கோரிக்கை

ஹத்ராஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் அனுமதியளிக்குமாறு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் பாஜகவின் மூத்த தலைவரான உமா பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு மூத்த சகோதரி போல இந்த ஆலோசனையை வழங்குவதாக டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ள உமா பாரதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பூட்டி வைத்து இறுதிச் சடங்கு நடத்தியதாக எழுந்த சர்ச்சைகளால், காவல்துறையினருக்கும் காவல்துறையால் யோகியின் அரசுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments