கேரளாவில் இன்று முதல் 144 தடையுத்தரவு அமல்

0 23421
கேரளாவில் இன்று முதல் 144 தடையுத்தரவு அமல்

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று காலை 9 மணி முதல் இம்மாத இறுதி வரை மாநிலம் தழுவிய 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது இடத்தில் 5 பேருக்கு மேல் ஒன்று சேரக் கூடாது என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள்  அமல்படுத்தப்படுகின்றன.

மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் ஆய்வு செய்து கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 315 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments