உ.பி.யில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் - எஸ்.பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்

0 4694
உ.பி.யில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் - எஸ்.பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்

 

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அவசர அவசரமாக உடலை தகனம் செய்தது தொடர்பாக, மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

ஹத்ராஸ் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக உத்தர பிரதேச முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எஸ்.பி., டி,எஸ்பி., மற்றும் வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதோடு, அவர்களுடன் சேர்த்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments