தங்க கடத்தல் குற்றவாளி சொப்னா ஐ-போன் பரிசாக அளித்தாரா ? ரமேஷ் சென்னித்தலா பதில்

0 1997
தங்க கடத்தல் குற்றவாளி சொப்னா ஐ-போன் பரிசாக அளித்தாரா ? ரமேஷ் சென்னித்தலா பதில்

தங்க கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சொப்னா சுரேஷ் தனக்கு ஐ-போன் பரிசளித்தார் என்று வெளியான செய்தியை கேரள காங்கிரஸ்  எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா மறுத்துள்ளார்.

சொப்னா சுரேஷின் வேண்டுகோளை ஏற்று ரமேஷ் சென்னித்தலா உள்ளிட்டோருக்கு 5 ஐ போன்களை வழங்கியதாக Unitac என்ற நிறுவனத்தின் இயக்குநர் சந்தோஷ் ஈப்பன் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ரமேஷ் சென்னித்தாலா, துபாய் சென்றிருந்தபோது, தமக்கும், மனைவிக்கும் தலா ஒரு ஐ போனை வாங்கியதாகவும், தன்னிடம் வேறு ஐ போன்கள் இல்லை என்றும் மறுத்துள்ளார்.

யுஏஇ துணைத் தூதரக அதிகாரிகள் வற்புறுத்தியதால், அங்கு நடந்த யுஏஇ தேசிய தின நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறிய அவர், அங்கு தமக்கு சால்வை மட்டுமே போடப்பட்டதாகவும், தமது பெயரை பயன்படுத்தி வேறு யாராவது ஐ போனை வாங்கி இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments