கூகுளை விட, இரு மடங்கு அதிக வருவாய் ஈட்டிய “ஆப்பிள்” நிறுவனம்

0 2907
கூகுளை விட, இரு மடங்கு அதிக வருவாய் ஈட்டிய “ஆப்பிள்” நிறுவனம்

உலகம் முழுவதும் டிக்-டாக், பப்-ஜி உட்பட ஏராளமான செல்போன் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும், கடந்த 3 மாதங்களில், ஆப்பிள் மற்றும்  கூகுள் நிறுவனம், செல்போன் செயலிகளின் பதிவிறக்கம் மற்றும் பயன்பாட்டின் மூலம் 2 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக, அமெரிக்காவின் முன்னனி தரவு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோர் செயலிகள் மூலம், 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயும், கூகுள் நிறுவனம், play store செயலிகள் மூலம் 75 ஆயிரம் கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூகுளை விட ஆப்பிள் நிறுவனம் இரு மடங்கு அதிக வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments