கூகுளை விட, இரு மடங்கு அதிக வருவாய் ஈட்டிய “ஆப்பிள்” நிறுவனம்
உலகம் முழுவதும் டிக்-டாக், பப்-ஜி உட்பட ஏராளமான செல்போன் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும், கடந்த 3 மாதங்களில், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம், செல்போன் செயலிகளின் பதிவிறக்கம் மற்றும் பயன்பாட்டின் மூலம் 2 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக, அமெரிக்காவின் முன்னனி தரவு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோர் செயலிகள் மூலம், 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயும், கூகுள் நிறுவனம், play store செயலிகள் மூலம் 75 ஆயிரம் கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூகுளை விட ஆப்பிள் நிறுவனம் இரு மடங்கு அதிக வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments