‘சித்தியைக் காதலித்தது பிடிக்கவில்லை’ - மது ஊற்றிக்கொடுத்து வெட்டிக்கொன்ற அக்கா மகன்கள்!

0 32705
கொல்லபட்ட சுரேஷ்குமார்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, சித்தியைக் காதலித்தது பிடிக்காமல் அக்கா மகன்கள் இரண்டு பேர் சேர்ந்து மது ஊற்றிக்கொடுத்து இளைஞரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குல்லா என்ற சுரேஷ் குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நித்யா என்ற பெண்ணும் எட்டு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரின் காதலுக்கு நித்யாவின் குடும்பத்தினர் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நித்யா சுரேஷ்குமாருடன் பழகிவந்துள்ளார். நித்யாவின் அக்கா மகனான குபி என்பன் மட்டும் சுரேஷ் குமாருடன் இணக்கமாக நட்பு பாராட்டி பழகி வந்துள்ளான். சுரேஷ் குமாரும் தன் காதலுக்கு குபி உதவுவான் என்று நம்பி அவனுடன் பழகிவந்துள்ளார்.

இந்த நிலையில், தனது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சுரேஷ் குமாரை அழைத்துள்ளான் குபி. இதைத் தொடர்ந்து சுரேஷ் குமார் தனது தாயாரிடம் சொல்லிவிட்டு, 500 ரூபாய் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். சுரேஷ்குமாரின் சக நண்பர்களான குபி, குபியின் அண்ணன் ஷ்யாம் உள்ளிட்ட ஐந்து பேர் நெல்லிக்குப்பம் - அகரம் செல்லும் சாலையில் காட்டுப்பகுதிக்குச் சென்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர். பிறகு அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது குபி, ஷ்யாம்  மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷ் குமாரைக் கொலை வெறியுடன் தாக்கி வெட்டிக் கொன்றனர். இந்தக் கொலை வெறி தாக்குதலில் சுரேஷ் குமார் உயிர் இழந்தார்.

சுரேஷ் குமாரின் தாயார் விஜயா கொடுத்த புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். இந்த விசாரணையில், சித்தியைக் காதலிப்பது பிடிக்காமல் சுரேஷ் குமாரை வெட்டிக்கொன்றதாக நித்யாவின் அக்கா மகன்கள் குப்பியும், ஷாமும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments