ஹத்ராஸ் உள்ளிட்ட பாலியல் சம்பவங்களில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் - உ .பி முதலமைச்சர்

0 2587
ஹத்ராஸ் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடர்புடையோருக்கு எப்போதும் நினைவில் நிற்கும் வகையில் கடும் தண்டனை அளிக்கப்படும் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.

ஹத்ராஸ்  உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடர்புடையோருக்கு எப்போதும் நினைவில் நிற்கும் வகையில் கடும் தண்டனை அளிக்கப்படும் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், உத்தர பிரதேச தாய்மார்கள், சகோதரிகளின் மரியாதை மற்றும் கண்ணியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென்று நினைப்போர் அழிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

இதே குற்றத்தில் ஈடுபட பிறர் அஞ்சும் வகையில் கடுமையான தண்டனைகள் அவர்களுக்கு அளிக்கப்படும் எனவும், இத்தண்டனைகள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு அரசு உறுதிபூண்டிருப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments