மணாலி - லே நெடுஞ்சாலையில் 9 கி.மீ. நீள குகைப்பாதையைப் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
இமாச்சலப் பிரதேசத்தில் 9 கிலோமீட்டர் நீளமுள்ள குகைவழிப் பாதையைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
மணாலி - லே நெடுஞ்சாலையில் ரோத்தங் கணவாய்ப் பகுதியில் மலையைக் குடைந்து குகைவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாச்சல முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் குகைவழிப் பாதையையும், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளையும் பார்வையிட்டனர். சாலைப் போக்குவரத்துக்கான உலகின் நீண்ட குகைப்பாதையான இதன் உட்புறக் காட்சி வெளியாகியுள்ளது.
Comments