உ.பி.யில் ராகுல் காந்தியை தொடர்ந்து திரிணமூல் எம்பியை போலீசாரால் கீழே தள்ளிவிட்டதாக புகார்

0 1995
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ராசில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரையனும் போலீசாரால் கீழே தள்ளிவிடப்பட்டு தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட இளம்பெண் குடும்பத்தை சந்திக்க சென்றபோது ராகுலை போலீசார் தள்ளி விட்டதாகவும், தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் டெரக் ஓ பிரையன் உள்ளிட்ட திரிணமூல் எம்பிக்கள் குழு ஹாத்ராஸ் சென்றபோது எல்லையிலேயே தடுக்கப்பட்டனர்.

அப்போது பிரையனை சாதாரண உடையில் இருந்த போலீஸ் அதிகாரி தாக்கியதாக அவருடன் வந்த பெண் தலைவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் டெரக் ஓ பிரையன் கீழே தள்ளிவிடப்பட்டது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments