அருணாசல பிரதேசம் இந்திய பகுதி , பிற நாடுகள் தலையிடுவதை எதிர்போம் : அமெரிக்க வெளியுறவுத்துறை

0 2742

அருணாசல பிரதேசம் இந்திய பகுதி என்றும், அங்கு பிற நாடுகள் அத்துமீற முயல்வதை கடுமையாக எதிர்ப்பதாக   அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்திய மாநிலமாக அருணாசல பிரதேசம் இருந்தபோதும், அதை லடாக்கின் ஒருபகுதியாக கூறி சீனா  உரிமை கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி,  அருணாசல பிரதேசத்தை இந்திய பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்து ஏறத்தாழ 60 ஆண்டுகள் ஆவதாகவும், அங்கு ராணுவத்தையோ அல்லது பொதுமக்களையோ வேறு ஒரு நாடு ஊடுருவச் செய்து, பகுதிகளை தன்னிச்சையாக உரிமை கொண்டாடுவதை  அமெரிக்கா கடுமையாக எதிர்க்கும்  என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments