நடிகை பாயல் கோஷ் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என இயக்குநர் அனுராக் காஷ்யப் தரப்பு விளக்கம்

0 1728
நடிகை பாயல் கோஷ் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என உரிய ஆதாரங்களுடன் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தரப்பு கூறியுள்ளது.

நடிகை பாயல் கோஷ் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என உரிய ஆதாரங்களுடன் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தரப்பு  கூறியுள்ளது.

கடந்த 2013 ல்  தமக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என்ற நடிகையின் புகாரின் பேரில் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அனுராக் காஷ்யபிடம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது சம்பவம் நடந்ததாக நடிகை கூறும் 2013 ஆகஸ்ட் மாதம் முழுதும் இலங்கையில் தங்கி இருந்ததற்கான ஆதாரங்களை அனுராக் காஷ்யப் சமர்ப்பித்தார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அனுராக் காஷ்யபின் பெயரை கெடுக்கும் நோக்கில் நடிகை பாயல் கோஷ் செயல்பட்டுள்ளதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments