சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களுக்கான உதிரிபாகங்கள், கருவிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல்
சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில், சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களுக்கான உதிரிபாகங்கள், கருவிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய விமானப்படையிடம் தற்போது 5 சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களை இயக்குகிறது. மேலும் 6 விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழுதான பாகங்களை மாற்றுவதற்கான உதிரி பாகங்கள், விமானத்தில் பயன்படுத்தப்படும் ரேடார், நைட் விஷன் பைனாகுலர், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான கருவிகள், மென்பொருள்கள், பயிற்சிக்குத் தேவையான கருவிகளை வழங்குமாறு இந்தியா கேட்டிருந்த நிலையில், அவற்றை விற்க அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Comments