தியாகராய நகரில் வயதான தம்பதியரைக் கட்டிப்போட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை வழக்கில் உறவினரே கொள்ளை அடித்தது அம்பலமாகியுள்ளது

0 9436
சென்னை தியாகராய நகரில் வயதான தம்பதியரின் வீட்டில் 250 சவரன் தங்கநகைகள் கொள்ளை போன வழக்கில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் வயதான தம்பதியரின் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன வழக்கில்,  உறவினரே கொள்ளை அடித்தது அம்பலமாகியுள்ளது.

தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவில் நூருல் ஹக் என்பவரின் வீட்டில் புகுந்த 8பேர் கொண்ட கும்பல் அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டுக் கொள்ளையடித்துவிட்டு காரில் ஏறித் தப்பிச் சென்றது.

இது தொடர்பான விசாரணையில், நூருல் ஹக் மனைவியின் அக்கா பேரனான காயல்பட்டினத்தைச் சேர்ந்த மொய்தீன் என்பவரே இந்தக் கொள்ளையை நடத்தியது தெரியவந்துள்ளது.

நூருல் ஹக்கின் வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாக இருந்து வரும் அவரது அக்கா கணவர் ரூபிளுக்கு மொய்தீன் 40 லட்ச ரூபாயைக் கடனாகக் கொடுத்ததும், அதைத் திருப்பித் தராததால் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மொய்தீனைக் கைது செய்வதற்காகக் காவல் தனிப்படையினர் காயல்பட்டினத்துக்கு விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments