அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 28343
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஏனைய மாவட்டங்களில் பொதுவாக  வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments