ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோஹித் சர்மா

0 1447
ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோஹித் சர்மா

ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 3ஆவது வீரர் எனும் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

பெங்களுரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி 180 போட்டிகளில் விளையாடி 5,430 ரன்களை குவித்துள்ளார். இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா 193 போட்டிகளில் விளையாடி 5,368 ரன்களை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் அபுதாபியில் நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்களுடன் ரோஹித் சர்மா, 5 ஆயிரத்து 68 ரன்களை சேர்த்தார். 3 பேரில் ரோஹித்தும், ரெய்னாவும் ஐபிஎல்லில் தலா ஒரு சதமடித்துள்ள நிலையில், கோலி 5 சதங்களை விளாசியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments