ரிலையன்ஸ் சில்லறை வணிக நிறுவனத்தில் அபுதாபியைச் சேர்ந்த முபாடாலா நிறுவனம், ரூ.6,247 கோடி முதலீடு
ரிலையன்ஸ் சில்லறை வணிக நிறுவனத்தில் அபுதாபியைச் சேர்ந்த முபாடாலா நிறுவனம், 6 ஆயிரத்து 247 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த முதலீட்டின் மூலம் 1 புள்ளி 4 சதவீதப் பங்குகளை முபாடாலா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதொடர்பு துறையை தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம் சில்லறை வணிகத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த முதலீடு பெறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் முபாடாலா நிறுவனம், ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
Comments