கொரோனா மருந்துக்காக 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டனவா..?
கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கலிபோர்னியாவில் உள்ள சுறாமீன்களுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்த தகவலின்படி கோவிட் 19 மருந்துக்காக சுறா மீன்களின் கல்லீரலில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதற்காக சுமார் 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
சுறாக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க அதன் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் ஸ்குவேலின் என்ற எண்ணெய்ப் பசையை கரும்பின் மேற் பகுதியில் இருந்து செயற்கை முறையில் தயாரிப்பதற்காகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Comments