நடிகை அளித்த பாலியல் புகாரையடுத்து, இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் சுமார் 8 மணி நேரம் போலீசார் விசாரணை

0 2655
நடிகை அளித்த பாலியல் புகாரையடுத்து, இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் சுமார் 8 மணி நேரம் போலீசார் விசாரணை

நடிகை அளித்த பாலியல் புகாரையடுத்து திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் போலீசார் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

தம்மை பலவந்தப்படுத்தியதாக குற்றம்சாட்டிய நடிகை பாயல் கோஷ் இயக்குனர், அனுராக்கை கைது செய்யக் கோரி பிரதமர் அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். மகாராஷ்ட்ர ஆளுநரையும் நேரில் சந்தித்து நடிகை பாயல் கோஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் அனுராக் காஷ்யப்புக்கு சம்மன் அனுப்பிய போலீசார் நேற்று சரமாரியான கேள்விகளுடன் விசாரணை மேற்கொண்டனர். 8 மணி நேர விசாரணைக்குப் பின் அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments