வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

0 5436
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments