அண்டை நாடுகளின் இறையாண்மையை மதிக்காத சீனாவுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம்
அண்டை நாடுகளின் இறையாண்மையை மதிக்காமல் எல்லையில் ஆக்ரமிப்பு செய்ய சீனா திட்டமிடுவதாக அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் 60 ஆண்டுகளாக அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றே அமெரிக்கா ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவின் இறையாண்மையை மதிக்காமல் ராணுவ ரீதியாகவும் ஆக்ரமிப்புகள் மூலமாகவும் சீனா மேற்கொண்டு வரும் அனைத்து வித நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவிப்பதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் சீனாவும் ராணுவ பலத்தை பிரயோகம் செய்யாமல், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
Comments