அண்ணல் காந்தியடிகளின் 152 வது பிறந்தநாள்..!

0 2520
மகாத்மா காந்தி 152-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தி 152-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை சரியான திசை நோக்கி திருப்பியவர் அண்ணல் காந்தியடிகள். அகிம்சை, எளிமை, ஆன்மீகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்ற அவரது கொள்கைகள் எதிர்கால இந்தியாவின் தொலைதூர கலங்கரை விளக்குகளாக திகழ்ந்தன.

புத்தர், ஏசு ஆகியோரின் அகிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்ட காந்தி, ஒத்துழையாமை இயக்கம், மதக்கலவரங்களைத் தடுத்து உப்பு சத்தியாகிரகம், சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களை அமைதி வழியில் முன்னின்று நடத்தினார்.

தமது பேச்சுகள், எழுத்துகளால் நாட்டின் ஆன்மாவை விழிப்புறச் செய்து சுதந்திரப் போராட்டத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்ற காந்தி, ஆங்கிலேய அரசைப் பணிய வைத்தார் என்பது வரலாறு.

அரசியலில் மட்டுமின்றி பொதுவாழ்விலும் தூய்மை, ஒழுக்கம் போன்ற பண்புகளைப் போற்றியதால், இன்று உலகிற்கே வழிகாட்டும் தலைவராக கருதப்படுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments