பாகிஸ்தான் ராணுவத்துடன் இருந்த நெருங்கிய உறவை விளக்கிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்!
பாகிஸ்தான் ராணுவத்துடன் இருந்த நெருங்கிய உறவை எடுத்துக்காட்டும் விதமாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தியதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
லண்டனில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நவாஷ் ஷெரிப்பை, நாடு கடத்த இம்ரான் கான் அரசு முயன்று வருகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் காணொலி காட்சி மூலம் பேசிய அவர், 1998 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தளங்கள் மீது பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை குறிப்பிட்டுள்ளார்.
அப்போது சேதமடையாமல் கிடைத்த ஒரு ஏவுகணையைக் கொண்டு, பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணை தொழில்நுட்பத்தை உருவாக்கியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
தனது ஆட்சிக்காலத்தில்தான் பாகிஸ்தான் அணுசக்தி நாடாக மாறியது என்றும், ஜேஎப் 17 விமானம் சீனாவுடன் இணைந்து மேம்படுத்தப்பட்டது என்றும், 50 சதவீத ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன என்றும் நவாஷ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
Comments