ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி முடிவுகள் ஐரோப்பாவில் ஆய்வு!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகளை ஆராய்ந்து வருவதாக, ஐரோப்பிய ஒன்றிய மருந்து முகமை தெரிவித்துள்ளது.
தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி வழங்கும் நோக்கில் இந்த ஆய்வை நடத்துவதாக அது கூறியுள்ளது.
தடுப்பூசியின் பலன்கள் குறித்த முதற்கட்ட தரவுகளை இந்த முகமையின் மனித மருத்துகளுக்கான குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
உரிமம் பெறுவதற்கான முறையான விண்ணப்பத்தை ஆஸ்ட்ரா ஜெனகா தாக்கல் செய்யும் வரை இந்த ஆய்வு நீளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், பிரிட்டனில் ஒரு நபரிடம் இந்த தடுப்பூசி எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து பல நாடுகளில் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments