கூகுள் நிறுவன தயாரிப்பான பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5 ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

0 1765

கூகுள் நிறுவன தயாரிப்பான பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5 ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரு போன்களிலுமே, டைட்டன் எம் பாதுகாப்பு சிப் பொருத்தப்பட்டுள்ளதோடு, டூயல் ரியர் கேமராவும், கைவிரல் ரேகை சென்சார் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

hole-punch டிஸ்பிளேவுடன் கூடிய இந்த போன்களில், 8 மெகா பிக்சல் செல்பி கேமராவும் உள்ளது. 48 மணி நேரம் வரை தாங்கக் கூடிய பேட்டரி பவர்சேவர் மோட், வயர்லெஸ் சார்ஜிங், தண்ணீர் மற்றும் தூசி படியாத வகையில் அலுமினியத்தாலான வடிவமைப்பு என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்திய மதிப்பில் பிக்சல் 5 போனுக்கு 51 ஆயிரத்து 400 ரூபாயும், பிக்சல் 4ஏ5ஜி போனுக்கு 37 ஆயிரம் ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பம் உள்ள நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments