கூகுளில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி: கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தகவல்
அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செய்திகளை வாங்கி வெளியிட சுமார் 7400 கோடி ரூபாயை கூகுள் செலவிடும் என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுளில் வெளியிடப்படும் செய்திகளுக்கான கட்டணத்தை வழங்க வேண்டும் நீண்ட நாட்களாக பதிப்பாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்காக Google News Showcase என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
முதலில் ஜெர்மனியில் இது துவக்கப்பட்டு அங்குள்ள பத்திரிகைகளுடன் செய்திகளை பெறுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 200 பதிப்பாளர்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்தியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இது விரிவுபடுத்த உள்ளது.
பல வகையான, தரமான செய்திகளை வெளியிடுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என சுந்தர் பிச்சை தமது blog-ல் குறிப்பிட்டுள்ளார்.
Comments