லடாக் எல்லையில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்திய ராணுவம்

0 28123
லடாக் எல்லையில் எதிரிகளின் ரேடாருக்கும் சிக்காத நிர்பய் ஏவுகணைகளை இந்திய ராணுவம் நிறுத்தி உள்ளது. ஏவுகணைகளை குவிக்கும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

லடாக் எல்லையில் எதிரிகளின் ரேடாருக்கும் சிக்காத நிர்பய் ஏவுகணைகளை இந்திய ராணுவம் நிறுத்தி உள்ளது. ஏவுகணைகளை குவிக்கும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய - சீன இடையிலான எல்லை பிரச்சனை கடந்த மே மாதம் முதல் தீவிரமடைந்து உள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில் அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால் பதற்றம் குறைந்துள்ளது. ஆனாலும் கூட எல்லையில் படைகளை குவிப்பதை சீனா நிறுத்தவில்லை.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய திபேத் மற்றும் சின்ஜியாங் பிராந்தியத்தில் சீன ஏவுகணைகளை நிறுத்தி உள்ளது. 2000 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை சீன ராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளது. அத்துடன் காஷ்கர், ஹோடன், லாசா, நியாங்சி ஆகிய இடங்களிலும் சீன ராணுவம் ஏவுகணைகளை குவித்துள்ளது. இதையடுத்து இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணைகளை எல்லைக்கு கொண்டு சென்று உள்ளது.

1000 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கி அழிக்கும் நிர்பய் ஏவுகணைகளை இந்திய ராணுவம் இப்போது எல்லையில் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த ரக ஏவுகணைகளுக்கான ஏழாம் கட்ட சோதனைக்கு பின்னர் அவற்றை அடுத்த மாதம் ராணுவத்திலும், கடற்படையிலும் சேர்க்க திட்டமிடப்பட்டு இருந்த து.

ஆனால் எல்லையில் சீனா ஏவுகணைகளை குவித்துள்ளதை அடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், நிர்பய் ஏவுகணைகளை, உடனடியாக ராணுவத்தில் இணைக்கவும், அவற்றைக்கு எல்லையில் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்தே நிர்பய் ஏவுகணைகள் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள நிர்பய் ஏவுகணைகள் 1500 கிலோ எடையும், 21 அடி நீளமும் கொண்டவை.

200 முதல் 300 கிலோ எடை கொண்ட அணுகுண்டுகளை தாங்கி சென்று வீசும் வல்லமை பெற்றவை. மணிக்கு 857 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை எதிரிகளின் ரேடார்களுக்கு சிக்காமல் பறந்து இலக்கை தாக்கும்.

24 வகையான குண்டுகளை சுமந்து கொண்டு 1000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமையும் இந்த ஏவுகணைக்கு உண்டு.

எந்த கால நிலையிலும், எந்த இடத்தில் இருந்தும் ஏவக்கூடிய நிர்பய ஏவுகணை தரையில் இருந்து 100 மீட்டர் முதல் 4 கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கும்.

எதிரிகளின் இலக்கை துல்லியமாக அடையாளம் கண்டு, அதனை குறி தவறாமல் தாக்கும் திறனும், ஏவப்பட்ட பின்னரும் கூட இலக்கை மாற்றி அமைக்கும் தொழில் நுட்பமும் கொண்டது நிர்பய். இந்த ஏவுகணையை எல்லைக்கு கொண்டு சென்றாலும் கூட
சீன தூதரக அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments