ஹத்ராசில் கொல்லப்பட்ட பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகவில்லை -உ.பி கூடுதல் டிஜிபி

0 12236

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில், அதிரடி திருப்பமாக, கொல்லப்பட்ட பெண், பாலியல் வன்முறைக்கு ஆளாகவில்லை என மாநில கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.

உடற்கூறு அறிக்கையில், கழுத்து எலும்பில் ஏற்பட்ட காயத்தால் மட்டுமே மரணம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது என செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.

வகுப்புவாரி பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், கொல்லப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்று திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். கடந்த 14 ஆம் தேதி ஹத்ராசில் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட  இந்த 19 வயது தலித் பெண், நேற்று முன்தினம் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments