ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் : பிற மாநில தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்க உத்தரவு

0 3501
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் : பிற மாநில தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்க உத்தரவு

 ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் கீழ், பிற மாநில தொழிலாளர்களுக்கு  ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  நியாய விலைக் கடைகளில்  பொருட்கள் போதுமான அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் தங்கள் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் மூலம் பொருட்களை பெற ஏதுவாக உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்குள் வசிக்கும் கிராமம்  தவிர பிற இடங்களில் உள்ள  நியாயவிலை கடைகளிலும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments