தனியார் வங்கியில் ரூ.38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா

0 7984

கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, தனியார் வங்கியில் 38 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே ஸ்வப்னாவின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்தபோது அதில் கோடிக்கணக்கில் பணமும், நகைகளும் இருந்தன. இந்த நிலையில் மற்றொரு தனியார் வங்கியில் 38 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.

அந்த வங்கியில் உள்ள ஸ்வப்னாவின் கணக்குக்கு மேலும் சிலரிடம் இருந்து பணம் வந்துள்ளது. அதோடு அந்த வங்கியில் தான் ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தின் கணக்கும் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் வங்கியின் மானேஜருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments