கொரோனா 2-ஆம் அலை வந்தால் அதை எதிர் கொள்ள அரசு தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா 2-ஆம் அலை வந்தால், அதை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் செலவில் 16 சிடி ஸ்கேன் கருவிகளுடன் கூடிய கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை பெறக்கூடிய வார்டுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் முப்பரிமாண முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கப்படுவதால் 90 சதவிகிதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்றார்.
Launched the ultra fast, new 640 slice CT scanner @HospitalsApollo. The Chairman & Directors appreciated the Tamil Nadu Govt & the Health Dept for the effective planning & control measures done during #COVID__19. #Vijayabaskar pic.twitter.com/vosHN4DQpv
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) October 1, 2020
Comments