நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மனுத்தாக்கல்

0 1378
நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மனுத்தாக்கல்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த குற்றத்திற்காக அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனை மற்றும் 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக செயல்பட தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து ஒரு ரூபாய் அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார் பிரசாந்த் பூஷண்.

இந்நிலையில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments