கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 30 விழுக்காடு வாகனங்கள் விற்பனை அதிகம் - மாருதி சுசுகி நிறுவனம்
மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 442 வாகனங்களை விற்றுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 30 விழுக்காடு அதிகமாகும்.
கொரோனா சூழலில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது.
இந்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் அதன் வாகன விற்பனை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 993 பயணியர் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 43 விழுக்காடு அதிகமாகும்.
ஆல்டோ, எஸ் பிரஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விப்ட், பலினோ, டிசயர் உள்ளிட்ட சிறிய வகை வாகனங்களே அதிகம் விற்பனையாகியுள்ளன.
எர்டிகா, விதாரா பிரெசா உள்ளிட்ட பயன்பாட்டு வாகனங்கள் 23 ஆயிரத்து 699 விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 விழுக்காடு அதிகமாகும்.
Maruti Suzuki India Ltd posted total sales of 160,442 units in September 2020. A growth of 30.8% over the same period previous year. #AutoSales@Maruti_Corp @BWBusinessworld pic.twitter.com/KOxRNVXdTn
— BW Autoworld (@BWAutoworld) October 1, 2020
Comments