அமெரிக்காவில் நவம்பர் 25 க்கு முன்னர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வராது - மாடர்னா நிறுவனம் திட்டவட்டம்!

0 2246
அமெரிக்காவில் நவம்பர் 25 க்கு முன்னர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வராது - மாடர்னா நிறுவனம் திட்டவட்டம்!

நவம்பர் 25 ஆம் தேதிக்கு முன்னர், தனது தடுப்பூசிக்கான அவசரகால அங்கீகாரத்தை பெறும் எண்ணமில்லை என மாடர்னா நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனால் அதிபர் தேர்தல் நடக்கும் நவம்பர் 3 ஆம் தேதிக்கு முன்னர் இந்த தடுப்பூசியை பயன்பாட்டுக்கு விட நினைக்கும் அதிபர் டிரம்பின் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தினமான நவம்பர் 3 ஆம் தேதிக்கு முன்னர் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் அது தமக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என டிரம்ப் கருதுகிறார்.

ஆனால் நவம்பர் 25 ம் தேதியை ஒட்டியே தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் தயராகும் என்பதால் அதற்குப் பிறகே மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்படும் என மாடர்னா சிஇஓ ஸ்டீபன் பேன்சல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரசியல் லாபத்திற்காக டிரம்ப் நிர்வாகம், மாடர்னா தடுப்பூசி அங்கீகார நடைமுறைகளில் தலையிடலாம் என்ற அச்சமும் தடுப்பூசி நிபுணர்களிடம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments