சீனாவின் ”கனாஸ் ஏரி” மெய்மறக்க வைக்கும் அழகினால் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது
சீனாவின் கனாஸ் ஏரி, மெய்மறக்க வைக்கும் அழகினாலும், நீருக்கடியிலான மர்ம உயிரினம் குறித்த கதைகளாலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் அல்தே மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது சீனாவின் மிக ஆழமான ஏரி கனாஸ்.
சுமார் 190 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரியின் நிறம் பருவங்களுக்கு பருவம் மாறக்கூடியது. மேலும், அதன் நீருக்கடியில் உள்ளதாக நம்பப்படும் லோச் நெஸ் என்ற மர்ம உயிரினத்தை காணும் ஆர்வத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
Comments