தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமலுக்கு வந்தது..
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தைத் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து 3 குடும்பங்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை மாநில அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய அளவில் குடும்ப அட்டைதாரர்கள் சொந்த மாநிலத்தை விட்டு இடம்பெயரும்போது தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் உணவு தானியங்களைப் பெறத்தக்க வகையில் ஒரேநாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தைத் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்து 3 குடும்பங்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்கினார்.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் இன்று முதல் 32 மாவட்டங்களிலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 16ஆம் தேதியில் இருந்தும் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குப் புலம்பெயரும் முன்னுரிமைக் குடும்பஅட்டைதாரர்கள் பயோமெட்ரிக் தகவல் உறுதிப்படுத்தல் முறையில் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
Comments