திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரமோற்சவம் வீதி உலா நடத்தவும், பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவும் தேவஸ்தானம் முடிவு

0 1707
திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரமோற்சவம் வீதி உலா நடத்தவும், பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவும் தேவஸ்தானம் முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவத்திற்கு வீதி உலா நடத்தவும், நான்கு மாட வீதிகளில் பக்தர்களை அனுமதிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

வருகிற 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவம் நடைபெறுகிறது.

அதில், மலையப்ப சுவாமி வீதிஉலா வருவதோடு குறைந்த அளவு பக்தர்களை நான்கு மாடவீதிகளில் தனிநபர் இடைவெளியுடன் தரிசனத்திற்கு அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தற்போது நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இதேபோன்று பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களிலும் டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY