நடிகை சஞ்சனா கல்ராணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் ?

0 1366
நடிகை சஞ்சனா கல்ராணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் ?

கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணியின் 11 வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறையினர் முடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப் பெருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமுலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில் சஞ்சனா கல்ராணி 11 வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பதும், அவற்றில் 40லட்சம் ரூபாய் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

மேலும் சஞ்சனா கல்ராணியின் வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்பியது யார்? என்றும் விசாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் விசாரணையின்போது, சஞ்சனா தனது பணத்தை சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வந்த மன்சூர்கானின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் அதனை அவர் மோசடி செய்ததாகக் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments