கூவியது பிடிக்காததால், குயிலுக்கு நேர்ந்த கதி!- ஒருவர் கைது
மேட்டுப்பாளையத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள மரத்திற்கு வந்த குயிலை சுட்டுகொன்றவரிடத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்தனர்.
கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம், அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் ஜார்ஜ் ஜோசப் (வயது சுமார் 50. ) இவருக்கு பூர்வீக வீடு மேட்டுப்பாளையம் மாதையன் லேஅவுட்டில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் அவரது தாயார் வசிப்பதால், வார இறுதியில் ஜார்ஜ் ஜோசப் இங்கு வந்து தங்குவது வாடிக்கை. இந்த வாரம் விடுமுறையில் தாயாரைப் பார்க்க மேட்டுப்பாளையம் வீட்டுக்கு ஜார்ஜ் வந்துள்ளார், இவரது , வீட்டுக்கு அருகேயுள்ள மாமரத்தில் குயில் ஒன்று அமர்ந்து கொண்டு கூவி கொண்டு இருந்துள்ளது.
குயிலின் சத்தம் பிடிக்காமல் எரிச்சலடைந்த ஜார்ஜ் ஜோசப் தன்னிடமிருந்த ஏர்கன் துப்பாக்கி மூலம் குயிலை சுட்டு கொன்றுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு புகாரளித்தனர். மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், தலைமையிலான வனத்துறையினர் ஜார்ஜ் ஜோசப்பை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குயிலை சுட்டு கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார், இதையடுத்து. குயிலை சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது
Comments