ஆக்ரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளுக்கு தேர்தல் நடத்தி பாகிஸ்தானுடன் இணைக்கும் இம்ரான் கானின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை
ஆக்ரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பல்திஸ்தான் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நவம்பர் 15ம் தேதி தேர்தல் நடத்தி, பாகிஸ்தானின் 5வது மாகாணமாக இணைக்க முயற்சி செய்த பிரதமர் இம்ரான் கான் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இம்ரான் கானின் முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஆக்ரமிப்பு காஷ்மீர் அதிபராக உள்ள லத்தீப் அக்பரும் இந்த முடிவை ஏற்க முடியாது என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் வர்த்தகப் பாதை அமைப்பதற்கு இந்தியாவும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இதனால் சீனாவின் இழுப்புக்குப் பணியக்கூடிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments