கடந்த 6 ஆண்டுகளில் தவறான வெடிபொருட்களால் ராணுவத்தில் 27 பேர் உயிரிழந்ததாகத் தகவல்
கடந்த 6 ஆண்டுகளில் வெடிமருந்து தொழிற்சாலைகள் வழங்கிய தவறான வெடிபொருட்களால் ராணுவத்தில் 27 பேர் உயிரிழந்ததாக வெடிமருந்து வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெடிமருந்து வாரியம் ராணுவத்திற்கு அளித்துள்ள அறிக்கையில், கடந்த 6 ஆண்டுகளில் ராணுவம் வாங்கிய தவறான வெடிபொருட்களில் இழந்த பணத்தின் மூலம் 100 நடுத்தர பீரங்கிகளை வாங்கியிருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளது.
உற்பத்தியின் தரம் குறைவாக இருப்பதால் வாரத்திற்கு சராசரியாக ஒரு விபத்து நிகழ்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
2014 முதல் 400 விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இதில் 27 பேர் உயிரிழந்தும், 159 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments