பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் 28ந் தேதி, அடுத்த மாதம் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
ஆன்லைனில் வேட்புமனுத் தாக்கல் செய்யவும், டெபாசிட் பணத்தை செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிகள் இறுதிச் செய்யப்படாமலேயே தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.
Comments