சீனாவுடன் பேச்சுவார்த்தை - எல்லையில் பதற்றம் நீடிப்பு..!
இந்தியா சீனா ராணுவ அதிகாரிகளிடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
லடாக் எல்லையில் இந்திய சீனப் படைகள் அருகருகே இருப்பதால் பதற்றமான சூழலைத் தணிப்பதற்கு இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் நேற்று ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. மாஸ்கோவில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஒப்புக் கொண்ட 5 அம்ச பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
எல்லையில் பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் உயர் அதிகாரிகள் இடையே தகவல் தொலைத் தொடர்பு பரிமாற்றத்தை வலுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. அடுத்து ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை கமாண்டர்கள் அளவில் நடைபெற உள்ளதால் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான தேதியை விரைவில் இறுதி செய்யும்படி சீனா இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது எல்லையில் போரும் இல்லை அமைதியும் இல்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.
சீனா 1959ம் ஆண்டு ஒப்பந்தத்தை சுட்டிக் காட்டி வெளியிட்ட அறிக்கையையும் இந்தியா நிராகரித்துள்ளது. இருநாட்டு ராணுவத்தினரும் பின்வாங்க மறுப்பதால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.
Comments