குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 19-ந்தேதி நேர்காணல்

0 1770
குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 19-ந்தேதி நேர்காணல்

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19-ந்தேதி நேர்காணல் நடக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு மே 11ல் நடந்த தமிழ்நாடு கைத்தறி-ஜவுளிகள் சார்நிலைப்பணி, முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 16-ந்தேதியும், கடந்த ஆண்டு ஜூலை 27 முதல் 29-ந்தேதி வரை நடந்த பள்ளி கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 19-ந் தேதியும் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப் பட்டவர்கள் வருகிற 7 முதல் 14-ந்தேதி வரை தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பதிவேற்றம் செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments