பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

0 6741
பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது.

தமிழகத்தில் 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என்பதால், அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 28-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் என, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது.

வரும் 8-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், இதேபோல, 8ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரை தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே எந்த நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக் குழு சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

கணினி-இணைய வசதி இல்லாதவர்கள், மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலம் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களை www.tneaonline.org இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments