நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சீர்திருத்தங்கள்..

0 4889
நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சீர்திருத்தங்கள்..

நாடு முழுவதும் இன்று முதல் சில புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

முதலாவதாக, ஓட்டுநர் உரிமத்திற்கான ஆவணங்கள், இ-சலான் ஆகியன இனிமேல் இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படும்.  உரிமம் பெறுவதற்கு அளவுக்கு அதிகமான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை.

இரண்டாவதாக, மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் தங்களது பாலிசிகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படுகிறது. டெலிமெடிசினுக்கும் இனி காப்பீடு பொருந்தும்.

மூன்றாவதாக, இனிப்புகளை விற்கும் சுவீட்கடைகாரர்கள், அவற்றை எத்தனை நாட்களுக்குள் சாப்பிடவேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பது கட்டாயமாகிறது.

இவை தவிர இறக்குமதியாகும் டிவிக்களுக்கு 5 சதவிகித சுங்கவரி விதிப்பதால் அவற்றின் விலை அதிகரிக்கும். அதே போன்று வெளிநாட்டில் படிக்கும் பிள்ளைகள் அல்லது வேறு உறவினர்களுக்கு பணம் அனுப்புவோரிடம் இருந்து கூடுதலாக 5 சதவிகித வரி வசூலிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments