காங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..! ஒரு பொட்டலம் ஒரு உறுப்பினர்

0 10724
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காங்கிரஸ் கட்சியினர் நூறு நாள் வேலைக்கு சென்ற பெண்களை அழைத்து வந்து ஆளுக்கு ஒரு உறுப்பினர் அட்டையை கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, பின்னர் உறுப்பினர் அட்டையை திரும்ப பெற்றுச்சென்ற வினோத உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காங்கிரஸ் கட்சியினர் நூறு நாள் வேலைக்கு சென்ற பெண்களை அழைத்து வந்து ஆளுக்கு ஒரு உறுப்பினர் அட்டையை கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு,  பின்னர் உறுப்பினர் அட்டையை திரும்ப பெற்றுச்சென்ற வினோத உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த ஏ. நெடுங்குளம் கிராமத்தில் இளைஞர் காங்கிரஸார் நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம் வேடிக்கை நிறைந்ததாக இருந்தது.

மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், ஊராட்சிக்குழு துணை தலைவர் வேலுச்சாமி ஆகியோர் ஏற்பாட்டில் வாக்கு கேட்டு செல்வது போல நூறு நாட்கள் வேலைதிட்ட பெண்கள் பணி செய்யும் இடத்திற்கே சென்ற காங்கிரசார் அங்கிருந்த பெண்களுக்கு உணவு பொட்டலம் தருவதாக கூறி மொத்தமாக ஒரு இடத்திற்கு அழைத்து வந்தனர்.

தங்களால் தான் 150 நாள் வேலைதிட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர்களிடம் கூறிய காங்கிரசார் திடீரென உறுப்பினர் சேர்க்கை முகாம் என்ற பேனரை விரித்ததோடு, ஆளுக்கு ஒரு பெயர் எழுதாத உறுப்பினர் அட்டையையும் கையில் வைத்துக் கொள்ளும்படி கொடுத்தனர்.

கையில் கொடுத்திருப்பது டோக்கன் என்று சிலர் நினைத்திருக்க, பலருக்கு என்ன அட்டை என்பது கூட தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். அசராத காங்கிரஸ் நிர்வாகிகள் அவர்களுடன் நின்று குழு புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டனர்.

புகைப்படம் எடுத்துக் கொண்ட அடுத்த நொடியே அவர்களிடம் கொடுக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை காங்கிரசார் மீண்டும் திரும்ப பெற்றுக் கொண்டனர்.

கையில் கொடுக்கப்பட்ட டோக்கன்களை திரும்ப வாங்கிட்டாங்க என்று புலம்பியவாறு பெண்கள் அங்கிருந்து செல்ல அவர்களை அழைத்துச்சென்று மரத்துக்கு அடியில் அமரவைத்து ஆளுக்கு ஒரு சாப்பாடு பொட்டலத்தை வழங்கினர்.

அவர்கள் வழங்கிய மஞ்சள் சோற்றை பலரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அருகில் நின்ற நாய்க்கு சாப்பிட கொடுத்தார்.

உறுப்பினர் சேர்ர்க்கை என்றால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் விவரம் முழுமையான முகவரி அதில் இடம் பெற்று இருக்க வேண்டும், உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து பெற வேண்டும் இது எதுவுமே இல்லாமல் காங்கிரசார் உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் நாடகம் நடத்திச்சென்றதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments