தள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல் ..! பதற்றத்தில் வசூல் அதிகாரிகள்

0 25094
தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் கடையில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை சுருட்டிய கடை ஊழியர்கள் வீடு, கார், பிளாட் என செட்டிலான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கையூட்டு அதிகாரிகளால் அரசுப் பணம் கொள்ளை போன பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் கடையில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை சுருட்டிய கடை ஊழியர்கள் வீடு, கார், பிளாட் என செட்டிலான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கையூட்டு அதிகாரிகளால் அரசுப் பணம் கொள்ளை போன பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையில் உள்ள 7 ஊழியர்கள் சேர்ந்து 1கோடியே 80 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக தகவல் வெளியானது.

இந்த மோசடி குறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்க வேண்டிய மாவட்ட டாஸ்மாக் மேலாளார் வடமலை முத்துவோ, மோசடி செய்த தொகையை மீண்டும் வசூல் செய்வதற்காக அந்த 7 பேரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்து இருப்பதாக தகவல் வெளியானது.

கடையில் மதுப்பாட்டில் இருப்பை வாரந்தோறும் கணக்கிட்டு ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டிய மாவட்ட தணிக்கை அதிகாரிகளும், ஆய்வு அறிக்கையின் உண்மை தன்மை குறித்து நேரில் சென்று இருப்பு குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டிய மாவட்ட உதவி மேலாளார் வள்ளிக்கண்ணு, மேலாளர் வடமலை முத்து ஆகியோரும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் இந்த கையாடல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள வடமலை முத்து, அரசு பணத்தை ஊழியர்கள் ஏமாற்றி விடகூடாது என்பதால் அதனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் கையாடல் செய்த பணத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் சொந்தமாக வீடுகள், கார்கள் மற்றும் நிலங்களை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் குடிமகன்களின் பாக்கெட்டில் கைவைத்து வரும் டாஸ்மாக் ஊழியர்கள், மதுபாட்டில் விற்பனையில் கையாடல் செய்து அரசு கஜானாவிலும் கைவைத்திருப்பது ஆறுமுகநேரி டாஸ்மாக் கடை மூலம் அம்பலமாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments