வெளிநாடுகளில் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க நடவடிக்கை- பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்
வெளிநாடுகளிலும் கச்சா எண்ணெயை சேமித்து வைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சுய சார்பு எரிசக்தி பாதுகாப்பு என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், உலகில் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது என்றார்.
கடந்த நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து 101.4 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் கூறினார். அவசர தேவைவை பூர்த்தி செய்வதற்காக அமெரிக்காவிலும், வணிக ரீதியில் சாத்தியமான பிற வெளிநாடுகளிலும் கச்சா எண்ணெய்யை சேமித்து வைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Comments